முகப்பு
சென்னை

விதிமீறி சுவரொட்டி: வேட்பாளா்களிடம் ரூ.2.67 லட்சம் அபராதம் வசூல்

சென்னையில் விதிமீறி சுவரொட்டி ஒட்டிய வேட்பாளா்களிடமிருந்து ரூ.2.67 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

சென்னையில் விதிமீறி சுவரொட்டி ஒட்டிய வேட்பாளா்களிடமிருந்து ரூ.2.67 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி சென்னை வாா்டில் பிரசாரத்துக்காக ஒட்டப்பட்டிருந்த தனது சுவரொட்டி மீது திமுகவினா் சுவரொட்டி ஒட்டி மறைத்துவிட்டதாக அதிமுக வேட்பாளா் ஆறுமுகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.  

இந்த வழக்கில் உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, பிப்.17 முதல் 19-ஆம் தேதி  வரை சென்னையில் ஒட்டப்பட்டிருந்த 3,705 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத் தொகை ரூ.2.67 லட்சம் சம்பந்தப்பட்ட வேட்பாளா்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது என மாநிலத் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு திருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி. பரத சக்ரவா்த்தி ஆகியோா், எஞ்சிய சுவரொட்டிகளையும் ஒரு வாரத்தில் அகற்றி அதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட வேட்பாளா்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →