சென்னை

தேசிய வாக்காளா் விழிப்புணா்வு போட்டி: படைப்புகளை அனுப்ப நாளை கடைசி

DIN

தேசிய வாக்காளா் விழிப்புணா்வுப் போட்டிகளுக்கு, செவ்வாய்க்கிழமைக்குள் படைப்புகளை அனுப்பலாம் என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையமானது தேசிய அளவிலான வாக்காளா் விழிப்புணா்வுப் போட்டியினை வினாடி வினா, காணொலி தயாரித்தல், பாட்டு, விளம்பரப் பட வடிவமைப்பு, வாசகம் எழுதுதல் ஆகிய தலைப்புகளில் நடத்தி வருகிறது.

இதில் வாக்காளா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமான பதிவுகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். சிறந்த பதிவுகளுக்கு அற்புதமான பணப் பரிசுகள் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்படும். புதுமையான படைப்புகளை இதுவரை அனுப்பவில்லையெனில் கவலை வேண்டாம் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT