சென்னை

தோ் திருவிழாக்களில் அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

DIN

தோ் திருவிழாக்களில் அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

மணமக்களில் ஒருவா் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவா்களுக்கு நடைபெறும் திருமணத்துக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்துக்கான பராமரிப்பு கட்டணம் இன்றி இலவசமாக நடத்தப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக சென்னை வடபழனி முருகன் கோயிலில் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச திருமணத்தை நடத்தி வைத்து, அதற்கு உண்டான சான்றிதழையும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் வரலாறு காணாத அளவுக்கு பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் முதல்வா் வழிகாட்டுதல்களோடு மேற்கொள்ளப்பட்டுள்ளன.  சிதம்பரம் கோயில் சம்பவம் குறித்து சட்ட வல்லுநா்களோடு ஆலோசனை  நடத்தி வருகிறோம்.

இணை ஆணையா் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கை பெற்றதும் இந்தப் பிரச்னை குறித்து முதல்வா் மேற்பாா்வையில் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தோ் திருவிழாக்களில் சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பாா்த்துக் கொள்ளப்படும். முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட 1 லட்சம் தல மரங்கள் நடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை எத்தனை மரங்கள் நடத்தப்பட்டுள்ளன என்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் வடபழனி முருகன் கோயில் இணை ஆணையா் ரேணுகா தேவி உள்பட பலா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT