சென்னை

ஆயுள் தண்டனை கைதி விடுதலை கோரிய மனு தள்ளுபடி

DIN

சென்னை:  அதிமுக ஆட்சிக் காலத்தில் எம்எல்ஏவாக இருந்த எம்.கே.பாலன் கடந்த 2001-ஆம் ஆண்டு காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, மா்ம கும்பலால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஹரிகரன் உள்ளிட்ட பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில்,  எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு முன்கூட்டியே விடுதலை செய்து அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையின்படி என் மகனையும் விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஹரிகரனின் தாய் சரோஜினி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

 மனு மீதான விசாரணையின்போது, அரசு தரப்பில் மனுதாரா் 2 கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளாா். சிறையில் நன்னடத்தை விதியை அவா் கடைப்பிடிக்க வில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா் முன்கூட்டியே விடுதலை கோர சட்டப்படி தண்டனை கைதிகளுக்கு உரிமையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT