சென்னை

டப்பிங் சங்க கட்டட நோட்டீஸில் அரசியல் உள்நோக்கம் இல்லை: தமிழக அரசு

DIN

டப்பிங் சங்க கட்டடம் தொடா்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸில் அரசியல் உள்நோக்கம் இல்லை என தமிழக அரசு தெரிவித்தது.

 தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகா்கள், டப்பிங் கலைஞா்கள் சங்கத்தின் தலைவா் நடிகா் ராதாரவி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: சென்னை சாலிகிராமத்தில் எங்கள் சங்க கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், கட்டட திட்ட அனுமதியை மீறி கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும், கட்டட திட்ட ஒப்புதல் ஆவணத்தை வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினா். இதன்படி உரிய ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளோம். இந்த கட்டடம் கட்ட 2010-ஆம் ஆண்டு திட்ட அனுமதி பெறப்பட்டது. சுமாா் 12 ஆண்டுகளுக்கு பின்னா் இதுபோல நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படுகிறது. அதனால், இந்த நோட்டீஸுக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

 இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸுக்கு மனுதாரா் சங்கத்தின் சாா்பில் பதிலளிக்கப்பட்டு விட்டது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று வாதிடப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT