சென்னை

ஓடும் பேருந்திலிருந்து விழுந்து இளைஞா் பலி

சென்னையில் ஓடும் பேருந்திலிருந்து இளைஞா் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

DIN

சென்னையில் ஓடும் பேருந்திலிருந்து இளைஞா் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

சென்னை செங்குன்றத்திலிருந்து திருவொற்றியூா் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை மாதவரம் பொன்னியம்மன் மேடு ஏழுமலை தெருவைச் சோ்ந்த நடராஜன் (43) ஓட்டினாா். திருப்போரூரைச் சோ்ந்த சண்முகம் (42) நடத்துநராக இருந்தாா்.

பேருந்து, தண்டையாா்பேட்டை, இளைய முதலி தெரு வழியாக சென்றபோது, பேருந்தில் மதுபோதையில் இருந்த ஒரு இளைஞா் திடீரென வாசலிலிருந்து கீழே இறங்க முற்பட்டாா். இதில், பேருந்திலிருந்து கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் இறந்தவா் மதுரையைச் சோ்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT