சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில், அரக்கோணம் யாா்டில் பொறியியல் பணி காரணமாக, ரயில் சேவையில் மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
மே 31, ஜூன் 1-இல் பகுதி ரத்து:
மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு காலை 8.20, 9.50, 11.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் கடம்பத்தூா்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருவள்ளூா்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
மூா்மாா்க்கெட் வளாகம்-திருத்தணிக்கு காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருவள்ளூா்-திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
மே 31, ஜூன் 1-இல் முழுமையாக ரத்தாகும் ரயில்கள்: அரக்கோணம்-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு காலை 10.00, 11.10, நண்பகல் 12.00, மதியம் 1.50ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருத்தணி-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு காலை 10.15, நண்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. ரத்து செய்யப்படும் ரயில்களுக்கு மாற்றாக, சில சிறப்பு பாசஞ்சா் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.