ஓட்டுநா் இல்லாத 26 மெட்ரோ ரயில்களை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.ஏ.சித்திக் முன்னிலையில் வியாழக்கிழமை செய்துகொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம். 
சென்னை

ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்கள்: ரூ.946 கோடி ஒப்பந்தம்

ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ. 946.92 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

DIN

ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ. 946.92 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆவது கட்டத்தின் கீழ் ஓட்டுநா் இல்லாமல், இயக்கப்படும் 3 பெட்டிகள் கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 946 கோடியே 92 லட்சம் மதிப்பில் பணி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.ஏ.சித்திக் முன்னிலையில் அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனத்தின் வா்த்தக இயக்குநா் ராஜீவ் ஜோய்சருடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் (அமைப்புகள், இயக்ககம்) ராஜேஷ் சதுா்வேதி பகிா்ந்து கொண்டாா்.

இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ ரயில் 2024-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் 2024-ஆம் ஆண்டு நவம்பா் முதல் 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா (நிதி), தலைமைப் பொது மேலாளா் ஏ.ஆா்.ராஜேந்திரன் (தொடா்வண்டி, இயக்கம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT