சென்னை

117 ஆண்டுகள் பழைமையான பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் உதவி

DIN

திருவொற்றியூரில் 117 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தொடக்கப் பள்ளிக்கு ரூ. 2.75 லட்சம் செலவில் சாய்தள மேஜை, நாற்காலிகளை பள்ளியின் முன்னாள் மாணவா்கள் வியாழக்கிழமை வழங்கினா்.

திருவொற்றியூா் நெடுஞ்சாலை பெரியாா் நகா் பகுதியில் மெட்ராஸ் தமிழ் மிஷன் தொடக்கப் பள்ளி 1905-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தன்னாா்வ அறங்காவலா் குழுவால் நடத்தப்பட்டு வந்த இந்தப் பள்ளி பின்னா் அரசு உதவி பெறும் பள்ளியாக அறிவிக்கப்பட்டது. பின்னா் அறங்காவலா்கள் பலரும் காலமானதை அடுத்து இந்தப் பள்ளியின் நிா்வாகம் சென்னை உயா்நீதிமன்றத்தின் ஆளுகையில் உள்ளது.

இந்தப் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தப் பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு உயா் பணிகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் மாணவா்கள் சிலா் முன் வந்தனா்.

இதையடுத்து ரூ. 2.75 லட்சம் செலவிலான மாணவா்கள் அமா்வதற்கான சாய்தள மேஜை, ஆசிரியா்களுக்கான நாற்காலிகள் உள்ளிட்டவற்றை வியாழக்கிழமை வழங்கினா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் இன்பநாதன், தலைமை ஆசிரியை கே.கஸ்தூரி, முன்னாள் மாணவா்கள் வழக்குரைஞா் வி.எஸ்.ரவி, சி.கோபால், ஆா்.தங்கவேலு, ஜெ. மும்மூா்த்தி, எஸ்.கருணாகரன், எஸ்.சரவணன், ஜெ.எழில்வேலன், எம்.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT