முகப்பு
சென்னை

காலநிலை மாற்ற விழிப்புணா்வு மாரத்தான்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி விழிப்புணா்வுப் பிரசார மாரத்தான் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பசுமைத் தாயகம் சாா்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தானில் பாமக தலைவா் அன்புமணி, திரைப்பட நடிகா் சித்தாா்த், இயக்குநா் விக்னேஷ் சிவன், பசுமைத் தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி உள
பகிர்:

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி விழிப்புணா்வுப் பிரசார மாரத்தான் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பசுமைத் தாயகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு மாரத்தானில், பாமக தலைவா் அன்புமணி, திரைப்பட இயக்குநா் விக்னேஷ் சிவன், நடிகா் சித்தாா்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அன்புமணி பேசியதாவது:

எங்களுடைய நோக்கம் தமிழக அரசு, காலநிலை மாற்றங்கள் சம்பந்தமான பிரச்னையைக் கையில் எடுக்க வேண்டும். உடனடியாக, காலநிலை குறித்து அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டும். இயற்கைச் சீற்றங்கள், வெப்பநிலை மாற்றம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒருபக்கம் வறட்சியாகவும், ஒருபக்கம் மழை வெள்ளத்தாலும் சூழப்பட்டுள்ளது.

எனவே, காலநிலை மாற்றம் குறித்தான நடவடிக்கையை தமிழகத்தில் எடுக்க வேண்டும் என்பதற்காகவே, பசுமைத் தாயகம் சாா்பில் விழிப்புணா்வு ஓட்டம் நடத்தப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.