முகப்பு
செய்திகள்

முத்து என்கிற காட்டான் இணையத் தொடரில் விஜே பார்வதி போஸ்டர்!

விஜய் சேதுபதியின் முத்து என்கிற காட்டான் இணையத் தொடரில் விஜே பார்வதி நடிக்கிறார்.

Updated On : 23 மார்ச் 2026, 4:59 pm IST
முத்து என்கிற காட்டான் இணையத் தொடரில் விஜே பார்வதி போஸ்டர்! - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்
பகிர்:

விஜய் சேதுபதியின் முத்து என்கிற காட்டான் இணையத் தொடரில் விஜே பார்வதி நடிக்கிறார். இது தொடர்பான போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள “முத்து என்கிற காட்டான்” இணையத் தொடரில் நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

மேலும் இந்த இணையத் தொடரில், மலையாள நடிகர் இர்ஷாத் அலி, பிரபல பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், நடிகர்கள் சிங்கம் புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ், விஜே பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisement

நடிகர் விஜய் சேதுபதி - இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவான கடைசி விவசாயி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், “முத்து என்கிற காட்டான்” இணையத் தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

“முத்து என்கிற காட்டான்” இணையத் தொடர் வரும் மார்ச் 27 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில், முத்து என்கிற காட்டான் என்ற இணையத் தொடரில் பிக் பாஸ் பிரபலம் விஜே பார்வதி நடிக்கும் பாத்திரத்தின் போஸ்டரை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொடரில் லலிதா என்ற பாத்திரத்தில் விஜே பார்வதி நடிக்கிறார்.

இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருவதுடன், விஜே பார்வதியின் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

summary

Vijay Parvathy is playing the lead role in Vijay Sethupathi's web series Muthu Engira Kattan. A poster related to the same has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.