முகப்பு
செய்திகள்

பாரிஜாதம் தொடரில் இணையும் ஆடுகளம் நடிகர்!

பாரிஜாதம் தொடரில் இணையும் ஆடுகளம் நடிகர் குறித்து...

Updated On : 14 ஏப்ரல், 2026 at 3:48 PM
விஜே ஆயுப். - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 3:19 PM

பாரிஜாதம் தொடரில் ஆடுகளம் சீரியல் நடிகர் விஜே ஆயுப் நடிக்கிறார்.

நடிகை ஆல்யா மானசா நாயகியாக நடிக்கும் புதிய தொடரான பாரிஜாதம் தொடரில் ஆல்யா மானசாக்கு ஜோடியாக அக்‌ஷய் கமல் நடித்து வருகிறார்.

மேலும், இத்தொடரில் ஸ்வாதி, ராஜ்காந்த், லதா ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார். தாயை இழந்த நாயகி ஆல்யா மானசா, பாடகரைத் திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டில் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

Advertisement

ஆல்யா மான்சா, பாரிஜாதம் தொடரில் காதுகேட்கும் தன்மையை இழந்தவராக நடிக்கிறார். அக்‌ஷய் கமல் பாடகராக நடிக்கிறார்.

பாரிஜாதம் தொடர் வரும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பாரிஜாதம் தொடரில் ஆடுகளம் சீரியல் நடிகர் விஜே ஆயுப் நடிக்கிறார்.

இவர் நடிக்கவுள்ள கதாபாத்திரம் தொடர்பான தகவல் வெளியாகாத நிலையில், அசோக் - சுபத்ரா பாத்திரங்களின் மூன்றாவது மகனாக இருக்கக்கூடும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜே அயூப் தொகுப்பாளராக சின்ன திரையில் அறிமுகமானவர். இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில்லுனு ஒரு காதல் தொடர் மூலம் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி, ஜீ தமிழில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி போன்ற தொடர்களில் நடித்திருந்தார்.

தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆடுகளம் தொடரில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் விஜே ஆயுப், பாரிஜாதம் தொடரில் நடிக்கவுள்ளார்.

summary

Aadukalam serial actor VJ Ayub stars in the series Parijatham.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.