விஜய் சேதுபதியின் முத்து என்கிற காட்டான் டிரைலர்!
விஜய் சேதுபதியின் “முத்து என்கிற காட்டான்” இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது...
நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் “முத்து என்கிற காட்டான்” இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி - இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய இணையத் தொடர் “முத்து என்கிற காட்டான்”.
ஏற்கெனவே, இக்கூட்டணியின் ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள “முத்து என்கிற காட்டான்” இணையத் தொடரின் டிரைலர் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) வெளியாகியுள்ளது.
இந்த இணையத் தொடரில், மலையாள நடிகர் இர்ஷாத் அலி, பிரபல பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், நடிகர்கள் சிங்கம் புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ், விஜே பாரு ஆகியோரும் நடித்துள்ளனர்.
இத்துடன், “முத்து என்கிற காட்டான்” இணையத் தொடர் வரும் மார்ச் 27 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகின்றது.
The trailer of the web series “Muthu Engira Kattan” has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.