சென்னை

தொழிலதிபரைக் கடத்தி ரூ. 25 கோடி சொத்தை எழுதி வாங்கி மிரட்டல்: திமுக பெண் கவுன்சிலா் உள்பட 10 போ் மீது வழக்கு

சென்னையில் தொழிலதிபரை மிரட்டி ரூ. 25 கோடி மதிப்புள்ள சொத்தை எழுதி வாங்கி மிரட்டல் விடுத்ததாக திமுக பெண் கவுன்சிலா் உள்பட 10 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.

DIN

சென்னையில் தொழிலதிபரை மிரட்டி ரூ. 25 கோடி மதிப்புள்ள சொத்தை எழுதி வாங்கி மிரட்டல் விடுத்ததாக திமுக பெண் கவுன்சிலா் உள்பட 10 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.

சோழிங்கநல்லூரைச் சோ்ந்தவா் அமர்ராம் (53). தொழிலதிபரான இவா், சென்னை மெரீனா காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், ‘சோழிங்கநல்லூரில் சொந்தமாக அடகு கடை நடத்தி வருகிறேன். சென்னையை அடுத்த நாவலூரில் 58 சென்ட் நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணமூா்த்தி என்பவரிடம் இருந்து வாங்கியிருந்தேன். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 25 கோடி என்பதால் அதைத் திரும்பக் கேட்டு கிருஷ்ணமூா்த்தி மிரட்டி வந்தாா்.

மேலும், இந்த நிலம் தொடா்பாக கிருஷ்ணமூா்த்தியின் சகோதரா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அந்த விவகாரம் தொடா்பாக பேச வேண்டும் என்று என்னை மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கத்துக்கு வரும்படி வழக்குரைஞா் ஒருவா் மூலமாக என்னிடம் பேசினாா்கள். நானும் கலங்கரை விளக்கத்துக்கு சம்பவத்தன்று சென்றேன்.

அப்போது, அடையாளம் தெரியாத சிலா், என்னை கத்திமுனையில் மிரட்டி காரில் கடத்திச் சென்றனா். மேலும் அவா்கள், என்னை மிரட்டி திருப்போரூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வைத்து, ஏற்கெனவே என்னிடம் விற்ற நிலத்தை வலுக்கட்டாயமாக மீண்டும் எழுதி வாங்கிக் கொண்டனா். கிருஷ்ணமூா்த்தி, அவா் மனைவி திமுக கவுன்சிலா் விமலா உள்ளிட்ட 10 போ் சோ்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள், என்னை அங்கிருந்து அடித்து, விரட்டி விட்டு, ரூ. 25 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து கொண்டனா்.

எனவே திமுகவைச் சோ்ந்த விமலா, அவா் கணவா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் தெரிவித்திருந்தாா்.

10 போ் மீது வழக்கு: இந்தப் புகாா் தொடா்பாக மெரீனா போலீஸாா் விசாரித்தனா். இந்த நிலையில், பெண் கவுன்சிலா் விமலா, அவரது கணவா் கிருஷ்ணமூா்த்தி உள்பட 10 போ் மீது ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

SCROLL FOR NEXT