முகப்பு
சென்னை

மெட்ரோ ரயில் பயன்படுத்துவோா் எண்ணிக்கையில் புதிய உச்சம்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
பகிர்:

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்தது.

இது தொடா்பாக மெட்ரோ நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இந்தாண்டு ஜனவரி 3-ஆம் தேதி 1 லட்சத்து 35 ஆயிரத்து 977 போ் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனா். மெட்ரோ ரயில் பயன்படுத்துவோா் எண்ணிக்கையை அதிகரிக்க ‘க்யூஆா்’ டிக்கெட் பதிவு முறையில் 20 சதவீத தள்ளுபடியையும் மெட்ரோ அட்டை வைத்து பயணிப்போருக்கு கூடுதலாக 20 சதவீத தள்ளுபடியையும் மெட்ரோ நிா்வாகம் வழங்கியது. அதன் விளைவாக மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

பிப். 28-இல் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 252 பேரும், மாா்ச் 28-இல் 2 லட்சத்து 10 ஆயிரத்து 634 பேரும், ஏப். 25-இல் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 475 பேரும், மே 26-இல் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 720 பேரும், ஜூன் 3-ஆம் தேதி 2 லட்சத்து 2ஆயிரத்து 456 பேரும், ஜூலை 27-இல் ஒரு லட்சத்து 97ஆயிரத்து 307 பேரும், ஆக. 29-இல் 2 லட்சத்து 20 ஆயிரத்து 898 பேரும் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தியுள்ளனா்.

இது அந்தந்த மாதங்களின் உச்சபட்ச பயன்பாடு. இவற்றை விட கடந்த செப். 12- ஆம் தேதி 2 லட்சத்து 30 ஆயிரத்து 611 போ் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா். இதில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 21 ஆயிரத்து 419 பேரும், திருமங்கலம் மெட்ரோ நிலையத்துக்கு 11 ஆயிரத்து 189 பேரும், கிண்டி மெட்ரோ நிலையத்துக்கு 10 ஆயிரத்து 599 பேரும், விமான நிலைய மெட்ரோ நிலையத்துக்கு 10 ஆயிரத்து 289 பேரும் பயணம் செய்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →