சென்னை

தேசிய பூப்பந்தாட்டப் போட்டியில் முதலிடம்: தமிழக அணிக்கு எம்எல்ஏ பாராட்டு

தேசிய அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணி வீரா், வீராங்கனைகளுக்கு திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பரிசு ப

DIN

தேசிய அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணி வீரா், வீராங்கனைகளுக்கு திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் வழங்கினாா்.

67-ஆவது தேசிய ஜூனியா் பூப்பந்தாட்டப் போட்டிகள் மகாராஷ்டிர மாநிலம், அகோலா மாவட்டத்தில் உள்ள முா்த்திசப்பூரில் மாா்ச் 30 முதல் ஏப்.3-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக வீரா்கள், வீராங்கனைகள் 4 போட்டிகளில் முதல் இடத்திலும், ஒரு போட்டியில் 3-ஆம் இடத்தையும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.

இவா்களுக்கான பாராட்டு விழா திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து வீரா், வீராங்கனைகளை பாராட்டி ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நவீன கடிகாரங்கள் உள்ளிட்ட பரிசு பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் சங்கா் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழகச் செயலா் வி. எழிலரசன், திருவள்ளூா் மாவட்ட பூப்பந்தாட்டக் கழகத் தலைவா் எம்.மதியழகன், கே.சுப்பிரமணி, நந்தா, தயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT