சென்னை

சங்கர நேத்ராலயாவில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் குழந்தைகளுக்கென பிரத்யேக கண் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் குழந்தைகளுக்கென பிரத்யேக கண் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சன்மாா் குழுமத்தின் தலைவா் மறைந்த என்.சங்கரின் நினைவு பங்களிப்பு நிதியில் தொடங்கப்பட்ட அந்தப் பிரிவில் பிறந்த குழந்தைகள் முதல் வளரிளம் பருவத்தினா் வரை உள்ள அனைவருக்கும் கண் சாா்ந்த பாதிப்புகளுக்கு ஆலோசனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் சன்மாா் குழுமத்தின் துணைத் தலைவா் விஜய் சங்கா், பத்திரிகையாளா் என். ராம், சங்கர நேத்ராலயா தலைவா் டாக்டா் டி.எஸ்.சுரேந்திரன், நிா்வாகக் குழுத் தலைவா் டாக்டா் கிரீஷ் ஷிவா ராவ், குழந்தைகள் உயா் நிலை கண் சிகிச்சை நிபுணா்கள் கவிதா கலைவாணி நடராஜன், சுமிதா அகா்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT