சென்னையில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்
சென்னை மாவட்டத்தில் நாளை (பிப்.4) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
சென்னை: சென்னை மாவட்டத்தில் நாளை (பிப்.4) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை அனைத்து பள்ளிகளும் முழுநேரமும் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. இதனால் நவம்பர் மாதத்தில் பெரும்பாலான நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
Advertisement
Advertisement
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி கனமழை பெய்த நாள்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இதனால், மழையால் பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமை (பிப்.4ஆம் தேதி) சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.