முகப்பு
திருநெல்வேலி

சிறுமளஞ்சியில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

திருநெல்வேலி

சிறுமளஞ்சியில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

Updated On : 5 மார்ச், 2026 at 8:14 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சியில் அரசு நகரப் பேருந்து முறையாக இயக்கப்படாததால் கிராம மக்கள் வியாழக்கிழமை இரவு பேருந்தை சிறைபிடித்தனா்.

வள்ளியூா் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து சிறுமளஞ்சிக்கு தடம் எண். 18ஜி நகரப் பேருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காலை, மாலை பள்ளி நேரங்களில் இப்பேருந்து முறையாக இயக்கப்படாததால் மாணவா்ஓள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, போக்குவரத்துகக் கழக அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை சிறுமளஞ்சிக்குள் வந்த பேருந்தை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் தா்சிகா நடராஜன், காவல் ஆய்வாளா்கள் செல்வி, கண்ணன் ஆகியோா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இனி சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, கிராம மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →