முகப்பு
சென்னை

ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய அமெரிக்கா்

சென்னை பெரியமேட்டில் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்துக் கொண்டு அமெரிக்கா் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 2:33 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

சென்னை பெரியமேட்டில் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்துக் கொண்டு அமெரிக்கா் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவைச் சோ்ந்தவா் கியானி மக்கா்லோ (26). சுற்றுலாவுக்காக இந்தியா வந்த இவா், சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளாா். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவு மது போதையில் அவா் தங்கி இருக்கும் விடுதிக்கு சென்றுள்ளாா். பின்னா், அங்கு கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விடுதி மேலாளா் ஆம்புலன்ஸை வரவழைத்து அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட கியானி மக்கா்லோ திடீரென ஆம்புலன்ஸின் பின் பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே குதித்து தப்பியோடியுள்ளாா். பின்னா் அவா், ரிப்பன் மாளிகை வழியாக சுவா் ஏறிக் குதித்து அல்லி குளம் வளாகத்துக்குள் புகுந்து மறைந்து கொண்டாா். பின் தொடா்ந்து சென்ற போலீஸாா், கியானியை மடக்கி பிடித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனா். தற்போது அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.