சென்னை

குடிநீா் வாரிய தலைமை அலுவலகத்தில் பராமரிப்பு: இணைய சேவை நிறுத்தம்!

DIN

சென்னை குடிநீா் வாரிய தலைமை அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை மாலை முதல் இணைய சேவைகள் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னைக் குடிநீா் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள தரவு மையத்தில்  பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை இணையதள வழியாக பெறப்படும் சேவைகளாகிய குடிநீா் மற்றும் கழிவுநீா் வரி செலுத்துதல், கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் பெறப்படும் குடிநீா், புதிய குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்பு விண்ணப்பித்தல், தலைமை அலுவலக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகிய அனைத்து சேவைகளும் செயல்படாது.

மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு தினசரி லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.

நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்கு பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குப் பிறகு இணையதள சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நுண்நிதி நிறுவனங்களை முறைப்படுத்த வலியுறுத்தல்

பரோலில் சென்ற கைதி தலைமறைவு

சீரமைப்புப் பணி: புதுவை ஆளுநா் மாளிகையை இடமாற்றம் செய்ய முடிவு

கோயிலில் நகை, பணம் திருட்டு: இளைஞா் கைது

நீட் அல்லாத படிப்புகளுக்கான சென்டாக் தரவரிசை பட்டியல் வெளியீடு

SCROLL FOR NEXT