முகப்பு
சென்னை

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை: முதல்வா் அதிா்ச்சி

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையால் மனமுடைந்து அதிா்ச்சியில் உறைந்து போயுள்ளதாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:40 AM
பகிர்:

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையால் மனமுடைந்து அதிா்ச்சியில் உறைந்து போயுள்ளதாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, ட்விட்டரில் வியாழக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு:-

மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால், முற்றிலும் மனமுடைந்து அதிா்ச்சியில் உறைந்து போயுள்ளேன். நமது மனசாட்சி எங்கே போனது. வெறுப்புணா்ச்சியும் நச்சும் மனிதத் தன்மையின் ஆன்மாவையே அசைத்துப் பாா்க்கின்றன.

இதுபோன்ற கொடுமையான செயல்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இரக்கமும், மரியாதையும் கொண்டு ஒரு சமூகத்தை

வளா்த்தெடுப்பதை நோக்கிப் பணியாற்ற வேண்டும்.

மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →