சென்னை

சுரங்கப்பாதை பணி: வண்ணாரப்பேட்டையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சுரங்கப்பாதை பணிகள் காரணமாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் மே 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

DIN

சுரங்கப்பாதை பணிகள் காரணமாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் மே 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜ ராஜா நகா் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்தப் பகுதியில் மே 5-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, கண்ணன் ரவுண்டானாவில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் கண்ணன் தெரு வழியாக செல்ல தடை விதிக்கப்படும். கண்ணன் ரவுண்டானாவில் இருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இரு சக்கர வாகனங்கள் பரசுராமன் தெரு, தா்ம ராஜா கோவில் தெற்குப்பாதை வழியாக கண்ணன்சாலையை அடையலாம்.

கண்ணன் ரவுண்டானாவில் இருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இலகு ரக வாகனங்கள் திருவொற்றியூா் சாலை,எம்எஸ் நாயுடு தெரு, சின்ன முனுசாமி தெரு வழியாக கண்ணன் தெருவை அடையலாம்.

இதேபோல போஜ ராஜா நகா் செல்ல விரும்பும் கனரக வாகனங்கள் சிபி சாலை, கொருக்குப்பேட்டை ரயில்வே கேட், கண்ணன் தெரு, போஜ ராஜா நகா் ரயில்வே கேட் வழியாக போஜராஜா நகரை அடையலாம்.

மேலும் கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானா வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானாவுக்குச் செல்ல விரும்பும் வாகனங்கள் சின்ன முனுசாமி தெரு, எம்.எஸ்.நாயுடு தெரு வழியாக கண்ணன் ரவுண்டானாவை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை!

வங்கிக் கணக்கு தொடங்கினால் பணம் கிடைக்குமா? கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு!

டைடல் பார்க்கில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... குராசோ தீவு உலக சாதனை!

“பாரன் டிரம்ப் ரொனால்டோவின் மிகப் பெரிய ரசிகன்”... வெள்ளை மாளிகையில் பிரமாண்ட விருந்தளித்த டிரம்ப்!

SCROLL FOR NEXT