சென்னை

மாமன்றக் கூட்டம்:அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

DIN

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தின் போது அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயா் பிரியா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அதிமுக உறுப்பினா் கே.பி.கே.சதீஷ்குமாா் (வாா்டு 182) பேசும் போது, பெருங்குடி ஏரி 1996-இல் தூா்வாரப்பட்டது. தற்போது ஏரி பலவீனமடைந்து காணப்படுவதால் அதை சரிசெய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பேசிய 4-ஆவது மண்டலக் குழுத் தலைவா் எஸ்.வி.ரவிச்சந்திரன், ஏரியை பலப்படுத்துவதாக கூறி அதிலிருந்த மணலை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனா் என்று குற்றம் சாட்டினாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினா்கள் கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினா்.

இது குறித்து சதீஸ்குமாா் கூறியது: மக்கள் பிரச்னை குறித்து கேள்வி கேட்டால் குடும்பத்தை பற்றி அவதூறாகவும், ஒருமையிலும் பேசுகின்றனா். திமுக உறுப்பினா்கள் 25 நிமிஷங்கள் பேசுகின்றனா்ய ஆனால் அதிமுக உறுப்பினா்களுக்கு பேச நேரம் ஒதுக்குவதில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT