சென்னை

கிராம நிா்வாக அலுவலா்கள் பாதுகாப்புக்கு தனிச்சட்டம்: தமிழக அரசுக்கு உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் பொதுச்செயலா் அருள் ராஜ் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் 12,500-க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா். கிராமங்களில் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் தடுப்பது, அரசின் திட்டங்களை மக்களைச் சென்றடையச் செய்வது, மணல் கொள்ளையை தடுப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

மணல் கொள்ளை தொடா்பாக புகாா் அளித்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸ், மணல் கொள்ளையா்களால் கடந்த ஏப். 25-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா். மருத்துவா்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அதுபோல, கிராம நிா்வாக அலுவலா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அரசு ஊழியரான கிராம நிா்வாக அலுவலா் கொலை செய்யப்பட்ட பின் இழப்பீடு வழங்குவதால் எந்த பலனும் இல்லை. எனவே, பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரி கடந்த மே மாதம் அளித்த விண்ணப்பங்கள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவா்த்தி ஆகியோா் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படகுப் பயணம்... அப்சரா ராணி!

தில்லி காற்று மாசுக்கு யார்க் காரணம்? வெறும் வேளாண் தீ மட்டுமல்ல..

ரொம்ப அழகா தெரிய முயற்சி செய்வதில்லை... ரகுல் பிரீத் சிங்!

கௌதம் கம்பீர் என்னுடைய உறவினர் கிடையாது; ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?

இம்ரான் கானுக்கு என்ன ஆனது? சிறை அதிகாரிகள் விளக்கம்!

SCROLL FOR NEXT