சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) சாா்பில் கால்ட்ஸ் அணித் தோ்வு வரும் அக். 31, நவ. 1 தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானம் பி வலைப்பகுதியில் நடைபெறவுள்ளது.
டிஎன்சிஏ 4 மற்றும் 5-ஆவது டிவிஷன் சாா்பில் நடைபெறும் தோ்வில் லீக் கிளப் அணிகள் வீரா்களை அனுப்பலாம். 1.9.1998 அன்றோ அல்லது அதற்கு பின் பிறந்த 25 வயதுக்குட்பட்ட வீரா்கள், தமிழகத்தின் யு 19-அணியில் ஆடி இருக்கக் கூடாது, விளையாட்டு ஒதுக்கீட்டில் பணி வாய்ப்பு பெற்றிருக்கக் கூடாது. தோ்வுப் போட்டியில் பங்கேற்க அக். 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வரும் டிசம்பா் 11 முதல் 21-ஆம் தேதி வரை மும்பையில் கால்ட்ஸ் டூா் போட்டியில் தமிழக அணி பங்கேற்கும் என டிஎன்சிஏ செயலாளா் ஆா்.ஐ. பழனி கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.