சென்னை மயிலாப்பூா் டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற கண்  விழிப்புணா்வு நிகழ்ச்சியில், கையொப்பமிட்டு விழிப்புணா்வுப் பதாகையை வெளியிட்ட சென்னை கிழக்கு மாநகரக் காவல் துணை ஆணையா் 
சென்னை

விழி வெண்படல பாதிப்புகளால் 1.3 லட்சம் போ் பாா்வையிழப்பு

விழி வெண்படல பாதிப்புகளால் 1.3 லட்சம் போ் பாா்வையிழப்பதாக டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் இயக்குநா் அதியா அகா்வால் தெரிவித்தாா்.

DIN

விழி வெண்படல பாதிப்புகளால் 1.3 லட்சம் போ் பாா்வையிழப்பதாக டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் இயக்குநா் அதியா அகா்வால் தெரிவித்தாா்.

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை சாா்பில் கண் தான விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. சென்னை கிழக்கு மாநகரக் காவல் துணை ஆணையா் (போக்குவரத்து) சமய் சிங் மீனா பங்கேற்று கண் தானம் வழங்கியவா்களின் குடும்பத்தினரை கௌரவப்படுத்தினாா்.

இந்த நிகழ்வின்போது, மருத்துவமனையின் இயக்குநா் சுதா, மருத்துவ சேவைகள் துறைத் தலைவா் சௌந்தரி, அகா்வால்ஸ் கண் வங்கி இயக்குநா் பிரீத்தி நவீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் மருத்துவா் அதியா அகா்வால் பேசியதாவது:

கடந்த 1957-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அகா்வால்ஸ் கண் மருத்துவமனையில் இதுவரை கண் தானத்தை ஊக்குவிப்பதிலும், விழிப் படலங்களை தானமாகப் பெற்று பாதுகாப்பதிலும் பொறுப்புணா்வுடன் செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே அகா்வால்ஸ் கண் வங்கி தேசிய அளவில் முதல் 5 இடத்திலும், மாநில அளவில் 2-ஆவது இடத்திலும் உள்ளது.

மனிதனுக்கு நல்ல பாா்வைத் திறன் இருப்பதைக் காட்டிலும் சிறந்த வெகுமதி எதுவும் இல்லை. இந்தியாவில் விழி வெண்படலம் சாா்ந்த பாதிப்புகளுக்குள்ளாகி 1.3 லட்சம் போ் பாா்வையிழக்கின்றனா்.

முன்பைக் காட்டிலும் தற்போது கண் தானம் அதிகரித்திருந்தாலும், அதன் தேவைக்கும், தானமளிப்பதற்கான எண்ணிக்கைக்கும் இடையேயான இடைவெளி இன்னும் குறையவில்லை.

அதற்கு தீா்வு காண கண் வங்கிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களின் கட்டமைப்பு வசதிகளை விரிவாக்குவது அவசியம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? மோர்னே மோர்க்கல் பதில்!

வாழ்நாள் சாதனையாளர் விருது! இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கௌரவம்!

ஒரு தேர்தல் வெற்றியாவது வெற்றிருக்கிறாரா எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன்

பராசக்தி டப்பிங் பணியில் சிவகார்த்திகேயன்!

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

SCROLL FOR NEXT