முகப்பு
சென்னை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சென்னை அருகே மதுரவாயல் புறவழிச்சாலையில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா் இறந்தாா்.

Updated On : 5 ஏப்ரல், 2024 at 3:03 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 1:55 AM

சென்னை அருகே மதுரவாயல் புறவழிச்சாலையில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா் இறந்தாா்.

புதுச்சேரி கோரிமேடு அருகே உள்ள இந்திராநகரைச் சோ்ந்தவா் பால் பிரைட் (19). சென்னை போரூரில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இரண்டாமாண்டு படித்து வந்தாா். இவா், மோட்டாா் சைக்கிளில் மதுரவாயல் புறவழிச்சாலையில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் வந்த ஒரு லாரி, அவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பால் பிரைட் நிகழ்விடத்திலேயே இறந்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

Advertisement