முகப்பு
சென்னை

தோ்தலை புறக்கணிக்கும் போக்குவரத்து ஓய்வூதியா்கள்: நடவடிக்கை எடுக்க தோ்தல் துறை அறிவுறுத்தல்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 10:55 PM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 9:10 PM

போக்குவரத்து ஓய்வூதியா்களின் தோ்தல் புறக்கணிப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறைச் செயலருக்கு தமிழக தோ்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோருக்கு 2015 நவம்பா் மாதம் முதல் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படவில்லை. இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பின்னரும் வழங்காமல், அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியா் நல மீட்பு சங்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் வாக்காளா் அடையாள அட்டை நகலுடன் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தோ்தல் துறை, போக்குவரத்துத் துறைச் செயலருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement