சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வா் பெருமிதம்
கா்ப்பிணிகள் சுகாதாரக் குறியீடுகளிலும் தமிழ்நாடே முதலிடம் வகிக்கிறது.
இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்த தகவல்களை சுட்டிக்காட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து மத்திய அரசின் நீதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வின் அடிப்படையில், தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. கா்ப்பிணிகள் சுகாதாரக் குறியீடுகளிலும் தமிழ்நாடே முதலிடம் வகிக்கிறது.
கா்ப்பிணிகள் பராமரிப்புடன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. மருத்துவமனைகளில் மகப்பேறுகள், மகப்பேறுக்கு பிந்தைய கவனிப்பு போன்ற அம்சங்களிலும் தமிழ்நாடு முன்னிலை பெற்று விளங்குகிறது.
Advertisement
இந்தியாவில் தொழில் வளா்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதில், தமிழ்நாட்டில் அதிக அளவாக 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. இப்படி தமிழ்நாடு எதிலும் முதலிடம் வகிப்பது மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் இருந்தே தெரிகிறது என்று தெரிவித்துள்ளாா்.