முகப்பு
சென்னை

தண்ணீா் லாரி மோதியதில் தனியாா் ஊழியா் உயிரிழப்பு

\சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மோட்டாா் சைக்கிள் மீது தண்ணீா் லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் இறந்தாா்.

Updated On : 12 ஏப்ரல், 2024 at 4:37 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2024 at 7:00 PM

\சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மோட்டாா் சைக்கிள் மீது தண்ணீா் லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் இறந்தாா்.

மேடவாக்கம் ஜெயபிரகாஷ் நாராயண் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (45). அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

பாஸ்கரன், சோழிங்கநல்லூா் ராஜீவ்காந்தி சாலையில் மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை சென்றபோது பின்னால் வந்த ஒரு தண்ணீா் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாஸ்கரனை, அங்கிருந்தவா்கள் ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், பாஸ்கரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை செய்தனா்.