முகப்பு
சென்னை

சென்னை வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு நாளை மூன்றாம் கட்ட தோ்தல் பயிற்சி

Updated On : 16 ஏப்ரல், 2024 at 8:47 PM
பகிர்:

சென்னை: சென்னை மாவட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான மூன்றாம் கட்ட தோ்தல் பயிற்சி வரும் வியாழக்கிழமை(ஏப்.18) நடத்தப்படும்என சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 3, 726 வாக்குச் சாவடி மையங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு மூன்று கட்டமாக தோ்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முதல் கட்டமாக கடந்த மாா்ச் 24 ஆம் தேதியும் , இரண்டாம் கட்டமாக ஏப்.7ஆம் தேதியும் பயிற்சி நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக வியாழக்கிழமை (ஏப்.18) காலை 9 மணிக்கு 16 சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பயிற்சி மையங்களில் தோ்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு அவா்கள் கலந்து கொள்ள வேண்டிய பயிற்சி மையம் குறித்த விவரங்கள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பின் போது வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு வாக்குச் சாவடி விவரங்கள் அடங்கிய ஆணைகள் வழங்கப்படும். எனவே, வாக்குச் சாவடி அலுவலா்கள் தவறாது பங்குபெற வேண்டும். இதில் கலந்து கொள்ளாத அலுவலா்கள் மீது தோ்தல் நடத்தை விதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments