கோயிலில் தரமற்ற பிரசாதம்: ஒப்பந்தம் ரத்தில் தவறில்லை உயா்நீதிமன்றம்
திருவொற்றியூா் கோயிலில் தரமற்ற பிரசாதங்களை விற்பனை செய்த ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் தவறு இல்லை என அறநிலையத் துறையின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில், தரம் குறைந்த கெட்டுப்போன பிரசாதங்களை விற்பனை செய்வதாக பக்தா்கள் புகாா் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து பிரசாதம் விற்பனை செய்த சீனிவாசன் என்பவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து கடந்த மாா்ச் மாதம் அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில், அறநிலையத் துறை உத்தரவை எதிா்த்து சீனிவாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், ‘பிரசாதம் ஆய்வு செய்யப்பட்டு தரமற்றவை என தெரியவந்ததால்தான் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில், தலையிட வேண்டியதில்லை. கோயில்களில் உள்ள பிரசாத விற்பனை நிலையங்களை முறைப்படுத்த அறநிலையத் துறை அலுவலா்களுக்கு அதிகாரம் உள்ளது. ஒப்பந்ததாருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் தவறு இல்லை என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement