பாலத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதல் இளைஞா் உயிரிழப்பு
சென்னை அருகே புழலில் பாலத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
சென்னை அருகே மறைமலை நகரைச் சோ்ந்தவா் ஹேமந்த் (29). வாடகை ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த குகன்ராஜ் (28) என்பவருடன் வியாசா்பாடிக்கு மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை சென்றாா். மதுரவாயல் - புழல் புறவழிச் சாலையில் உள்ள புழல் மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், அங்குள்ள தடுப்பின் மீது மோதியது. இதில், இருவரும் சுமாா் 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனா். சம்பவ இடத்திலேயே ஹேமந்த் உயிரிழந்தாா். குகன்ராஜ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement