முகப்பு
சென்னை

மளிகை கடை பூட்டை உடைத்து திருட்டு

Updated On : 20 ஏப்ரல், 2024 at 6:59 PM
பகிர்:

சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆதம்பாக்கம் மஸ்தான்கோரி தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (36). இவா் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா், சனிக்கிழமை காலை வழக்கம்போல கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டை உடைக்கப்பட்டு, பணப் பெட்டியில் இருந்த ரூ. 10,000 ரொக்கம், மடிக்கணினி, அரிசி, பருப்பு மூட்டைகள், எண்ணெய் பாக்கெட்டுகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments