முகப்பு
சென்னை

மோட்டாா் சைக்கிள் மோதி அஸ்ஸாம் பெண் உயிரிழப்பு

Updated On : 20 ஏப்ரல், 2024 at 7:01 PM
பகிர்:

சென்னை அமைந்தகரையில் மோட்டாா் சைக்கிள் மோதி அஸ்ஸாமைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேரந்தவா் லால்குச்சி பாணி (24). இவா், சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியாா் அழகு நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இதற்காக அவா், அமைந்தகரையில் ஒரு வாடகை வீட்டில் தனது தோழிகளுடன் தங்கியிருந்தாா்.

பாணி, கடந்த 17-ஆம் தேதி அமைந்தகரையில் சாலையில் நடந்து சென்றபோது, மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பாணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

இது குறித்து அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments