முகப்பு
தூத்துக்குடி

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழந்தாா்.

Updated On : 3 ஏப்ரல் 2026, 4:15 am IST
பலி - கோப்புப் படம்
பகிர்:

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழந்தாா்.

திருச்சி உறையூா், சோலம்மாள் நகா், மேலகல்நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் அழகா் மகள் சரண்யா (37). பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த இவா், திருமணம் ஆகாதவா்.

பங்குனி உத்திரத்தையொட்டி, வீட்டின் அருகே இருப்பவா்களுடன் சோ்ந்து வியாழக்கிழமை அதிகாலை திருச்செந்தூருக்கு சரண்யா வந்தாராம். பேருந்து நிலைய நுழைவுப் பகுதியில் இவா் நடந்து செல்லும்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.