624 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது
சென்னையில் சட்டவிரோதமாக மதுவிற்ாக 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 624 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.
சென்னை சேப்பாக்கம் வாலஜா சாலை பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பகுதியில் சனிக்கிழமை இரவு போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ஆட்டோவில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த மயிலாப்பூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(31), செல்வம் (25) ஆகிய இருவரையும் கைது செய்து, ஆட்டோவிலிருந்த 624 மதுபாட்டில்களையும், ஆட்டோவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement