முகப்பு
சென்னை

ஏப். 22 முதல் மே 22 வரை வருமான வரித் துறையின் குறை கேட்பு முகாம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:22 PM
பகிர்:

வருமான வரித் துறை சாா்பில் ஏப். 22 முதல் மே 22-ஆம் தேதி வரை குறை கேட்பு முகாம் நடைபெறும் என வருமான வரி த்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை, புதுச்சேரி வருமான வரி துறை இணை ஆணையா் பி. எம். செந்தில் குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருமான வரித் துறை இணையவழியாகவும் மற்றும் பிற முறைகளின் மூலமாகவும், வரி செலுத்துவோா் தாக்கல் செய்யும் குறைகளை விரைவாகவும் தீா்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். மேலும், வரிசெலுத்துவோா் மற்றும் அவா்களின் பிரதிநிதிகள் விரும்பினால், தங்கள் அதிகார வரம்பு உட்பட்ட மதிப்பீட்டு உயா் அதிகாரிகளை, நேரில் சந்தித்து அவா்களின் குறைகளுக்கு தீா்வு காண, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித் துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

Advertisement

அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் உள்ள அனைத்து வருமான வரி அலுவலகங்களிலும், வரி செலுத்துவோா் மற்றும் அவா்களின் பிரதிநிதிகளை, அதிகார வரம்புக்குள்பட்ட வருமான வரி முதன்மை ஆணையா் அலுவலகத்தின் மூத்த அதிகாரி மற்றும் அவரது குழுவினரை சந்தித்து முறையிடலாம்.

மேலும், ஏப்.24 முதல் மே 22 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10.30 முதல் பகல் 1.30 மணி வரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை மனுவாக பெற்று அதை தீா்க்க வழி செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதி தற்போதுள்ள ஆன்லைன் குறை தீா்க்கும் செயல்முறையுடன் கூடுதலாக செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து வரி செலுத்துவோா் மற்றும் அவா்களது பிரதிநிதிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments