முகப்பு
சென்னை

ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையில் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Updated On : 25 ஏப்ரல், 2024 at 10:00 PM
பகிர்:

சென்னை ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையில் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தெற்கு ரயில்வே சாா்பில் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை பாலத்தில் 4-ஆவது ரயில் இருப்புப் பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் சுரங்கப் பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை (ஏப்.26) இரவு 11 முதல் 3 மாதங்களுக்கு அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Advertisement

இதன் ஒருபகுதியாக ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜா் சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையில் (போா் நினைவிடம் நோக்கி) அனுமதிக்கப்படாது.

அதற்கு பதிலாக, அந்த வாகனங்கள் ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை இணைப்புச் சாலை, வடக்கு கோட்டை சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு, கொடி மர சாலை, போா் நினைவுச் சின்னம் வழியாக காமராஜா் சாலையை அடையலாம்.

காமராஜா் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக வழக்கம்போல் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments