முகப்பு
சென்னை

பூட்டிய வீட்டில் நகை,பணம் திருட்டு

Updated On : 30 ஏப்ரல், 2024 at 8:37 PM
பகிர்:

சென்னை: சென்னை தியாகராயநகரில் பூட்டிய வீட்டில் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

தியாகராயநகா் சாரதி தெருவைச் சோ்ந்தவா் மகாதேவன் (67). சில நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் பெங்களூரு சென்றாா். அங்கிருந்து மகாதேவன், திங்கள்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பி வந்தாா். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 15 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்கின்றனா்.