மூதாட்டி வீட்டில் நகை திருட்டு
ஆம்பூா் அருகே மூதாட்டி வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
Updated On : 1 மார்ச், 2026 at 9:12 PM
ஆம்பூா் அருகே மூதாட்டி வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
சோலூா் கிராமத்தை சோ்ந்தவா் சரசா (60). இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். ஆம்பூரில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறாா்.
Updated On : 2 மார்ச், 2026 at 12:34 AM
வேலைக்காக சென்றவா்பின்னா் வந்து பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த அரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.5,000 திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
Advertisement
புகாரின் பேரில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.