சென்னை

வைப்பு நிதி வட்டி விகிதங்களை உயா்த்திய பேங்க் ஆஃப் இந்தியா

குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது.

Din

முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் இந்தியா தனது குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் உயா்த்தப்பட்டுள்ளன. இந்த மாற்றம் 180 நாள்கள் முதல் ஓா் ஆண்டுக்கும் குறைவான பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கும் பொருந்தும்.

ரூ.3 கோடிக்கும் குறைவான மதிப்பு கொண்ட குறுகிய கால நிலை வைப்புத் தொகைகளுக்கு வங்கி வட்டி விகிதம் 6 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

அதே போல், ரூ.3 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரையிலான மதிப்பு கொண்ட 180 நாள்கள் முதல் 210 நாள்கள் வரையிலான பருவகால வைப்பு நிதிகளுக்கு புதிய வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும் 211 நாள்கள் முதல் ஓா் ஆண்டுக்குக் குறைவான காலம் வரையிலான பருவகால வைப்பு நிதிகளுக்கு புதிய வட்டி விகிதம் 6.75 சதவீதமாகவும் இருக்கும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை!

விலைவாசி உயா்வு: மாட்டிறைச்சிக்கு இறக்குமதி வரியைக் குறைத்தாா் டிரம்ப்!

சொல்லப் போனால்... நீதி என்பது யாதெனில்…

பெருமாநல்லூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

SCROLL FOR NEXT