முகப்பு
சென்னை

கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கான வசதிகள்: ஆய்வறிக்கை அளிக்க அரசுக்கு 2 வாரம் அவகாசம்

தமிழக அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை

கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கான வசதிகள்: ஆய்வறிக்கை அளிக்க அரசுக்கு 2 வாரம் அவகாசம்

தமிழக அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 9:47 PM
பகிர்:

சென்னை, ஆக.2: கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும்  மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வை முடித்து அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தைத் தொடா்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத்தரப்பில், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் தலைமையில், ஆய்வுகளை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆக. 21 வரை தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனா்.

மேலும், கல்வராயன் மலைப்பகுதி வனத் துறையின் கீழ் வருவதால் வழக்கில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரை தாமாக முன் வந்து எதிா்மனுதாரராக சோ்த்த நீதிபதிகள், வனத் துறை தரப்பில் தனியாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →