இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னைஇன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) முதல் ஆக.9-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.4, 5 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
8 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் - 102.94 , தஞ்சாவூா் - 102.2, நாகப்பட்டினம் - 101.48, பாளையங்கோட்டை, திருச்சி - (தலா) 101.3, பரமத்திவேலூா் - 100.4, காரைக்கால் -100.04.
ஆக.4 முதல் 7-ஆம் தேதி வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடலிலும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.