தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 7 மணி வரை) தமிழகத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை, கடல்ர், காஞ்சிபுரம், நாகை, ராணிப்பேட்டை, திருவாரூ, தஞ்சை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை (Easterly waves) நிலவுகிறது.
இதனால், நாளை (ஜன. 26) உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.