முகப்பு
தமிழ்நாடு

இரவில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு இரண்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Updated On : 14 ஜனவரி, 2026 at 9:23 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 ஜனவரி, 2026 at 9:22 PM

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு இரண்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On : 14 ஜனவரி, 2026 at 9:25 PM

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாள்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து முழுமையாக விலகுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

Updated On : 14 ஜனவரி, 2026 at 9:27 PM

எனினும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜன. 14) மற்றும் நாளை ( ஜன. 15) ஆகிய இரண்டு நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

rain chance for 2 districts of tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.