முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 3:08 AM
மழை (கோப்புப்படம்)
பகிர்:

அடுத்த 2 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப்.3) மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

வரும் புதன், வியாழக்கிழமை (பிப்.4, 5) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) கோயம்புத்தூர், தென்காசி, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 3 districts for the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.