அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை
கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்திருப்பதாவது, மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
21-03-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (21-03-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது, காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3° செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2° செல்சியஸ் வரை குறைந்தும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருந்தது.
· அதிகபட்ச வெப்பநிலை: மதுரை விமான நிலையம்: 38.0° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை:
சமவெளிப்பகுதிகளில்: தர்மபுரி: 18.2° செல்சியஸ்
மலைப்பகுதிகளில்: கொடைக்கானல்: 7.5° செல்சியஸ் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 6 districts including Kanyakumari until 7 pm.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.