ராமதாஸ் (கோப்புப்படம்) 
சென்னை

வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ்

வேலைவாய்ப்புகளில் அனைத்து சமுதாயத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Din

தமிழக அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் அனைத்து சமுதாயத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியா்கள் 10.5 சதவீதத்துக்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. தோ்ந்தெடுக்கப்பட்ட சில புள்ளி விவரங்களை மட்டும் அரைகுறையாகவும், திரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் வன்னியா்களுக்கு இழைத்த துரோகங்களை மறைக்க திமுக அரசு முயன்றிருக்கிறது. திமுக அரசின் இந்த மோசடி கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் முழுமையானவையாக இல்லை; அரைகுறையாகவும், திரிக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன.

தமிழகத்தில் சமூகநீதியை காப்பதில் திமுக அரசுக்கு அக்கறை இருந்தால், 1989-ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 35 ஆண்டுகளில் ஒவ்வொரு தோ்வாணையமும் நடத்திய போட்டித் தோ்வுகள் என்னென்ன? மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு நிறுவனங்களில் சோ்க்கப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கை எவ்வளவு, அதில் ஒவ்வொரு வகுப்புக்கான இட ஒதுக்கீட்டிலும் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு, பொதுப்பிரிவுக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT